அத்தியாவசிய மருந்துகள் சிலவற்றுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

Date:

அத்தியாவசிய மருந்துகள் சிலவற்றுக்கு அதிகபட்ச சில்லறை விலையினை மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க் அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 60 அத்தியாவசிய மருந்துகளை சேர்ந்த 131 டோஸ்களின் விலைகள் கட்டுப்படுத்தப்பட்டு, அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த மருந்துகளில் எதனையும் அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் விற்பனை செய்வது சட்டவிரோதமானது என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏதாவது ஒரு இடத்தில் கட்டுப்பாட்டு விலையை மீறி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டால் complaints@nmra.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாக அறிவிக்க முடியும் என அமைச்சின் செயலாளர் வைத்தியர் ஆர்.எம.எஸ்.கே ரத்நாயக்க தெரிவித்தார்.

டொலரின் பெறுமதி அதிகரித்த கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நூற்றுக்கு 9 சதவீதத்தால் விலை அதிகரிக்க அனுமதி வழங்கியதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...