கெளரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் தலைமையில் விசேட நிகழ்வு!

Date:

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் கௌரவ பிரதமர் மஹிந்த ராஷபக்‌ஷ அவர்களது 76வது பிறந்த தினத்தையொட்டி அவர்களுக்கு ஆசி வேண்டி ஒழுங்கு செய்யப்பட்ட விசேட துஆப் பிராத்தனை ஒன்று முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் இப்ராஹிம் அன்ஸார் அவர்களது தலைமையில் இன்று 18.11.2021 ஆம் திகதி வியாழக் கிழமை காலையில் தெஹிவளை ஜூம்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றது.

புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கமைய முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.

கௌரவ பிரதமரின் முஸ்லிம் சமய விவகார இணைப்பாளர் அஷ்ஷெய்க் ஹசன் மௌலானா அவர்கள் சிங்கள மொழியிலும், அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையின் கொழும்பு தெற்கு கிளையின் தலைவர் அஷ்ஸெய்க் அப்துல் அஸீஸ் அவர்கள் தமிழிலும் விசேட துஆப்பிரார்த்தனைகளை நடத்தினார்கள்.

இதில் நீதி அமைச்சர் அலி சப்ரி பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், மர்ஜான் பளீல், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் அலா அகமட், பிரதமரின் முஸ்லிம் சமய விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் பர்சான் மன்சூர், திணைக்களத்தின் அதிகாரிகள், தெஹிவலை பள்ளிவாசல் தலைவர் மற்றும் நிருவாக சபை உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் பள்ளிவாசல்களில் நீண்டகாலம் கடமையாற்றியவர்களுக்கு கொழும்பு மாவட்ட முஅத்தின் மற்றும் கதீப்மார் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் சான்றிதழ்களும் காப்புறுரி நன்கொடைகளும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...