கணிதம் மற்றும் விஞ்ஞானப் பிரிவு ஆசிரியர்களுக்கான விசேட வாய்ப்பு!

Date:

சீஷெல்ஸ் நாட்டில் உள்ள பாடசாலைகளில் கணிதம் மற்றும் விஞ்ஞானப் பாடங்களை கற்பிக்க தகுதியான 17 ஆசிரியர்களை தெரிவு செய்து தருமாறு வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு, கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சுக்கு விடுத்த அறிவித்தலுக்கு இணங்க இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 17  ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் இருப்பதாக இலங்கையில் உள்ள சீசெல்ஸ் துணைத் தூதரகம் கடந்த ஒக்டோபர் மாதம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு அறிவித்துள்ளது.

கணித பாடத்திற்கு ஏழு வெற்றிடங்களும், விஞ்ஞானப் பாடத்திற்கு 10 வெற்றிடங்களும் காணப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...