வாழ்க்கையின் மிகவும் கடினமான வேளைகளில் ஊடகவியலாளர்கள் தம்மோடு இருந்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஊடகத்துறை அமைச்சு ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர்களுக்கான காப்புறுதி வழங்கும் நிகழ்வு இன்று (02) அலரி மாளிகையில் இடம்பெற்றது.இந் நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போது ஊடகவியலாளர்கள் எம்மோடு இல்லையென குற்றம் சாட்டுகிறோம்.ஆனால் இவை புதிய புதிய விடயமல்ல , ஊடகங்களுக்கு ஒரு அரசாங்கத்தை நிறுவும் சக்தியுண்டு மாறாக ஒரு போதும் அரசை பாதுகாக்க முடியாது.அரசில் உள்ளவர்களுக்கு மாத்திரமே அரசை பாதுகாக்க முடியும் என்றார்.