பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்தவின் சடலம் நாளை நாட்டுக்கு!

Date:

பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் போராட்டக் குழுவால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட தியவடனகே தொன் நந்தசிறி பிரியந்த குமாரவின் சடலம் நாளை (06) ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை ஊடாக அரச செலவில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக வெளிநாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.

சடலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.பிரியந்த குமாரவின் மரணம் தொடர்பிலான விசாரணை அறிக்கையொன்றை வழங்குமாறு இஸ்லாமாபாத்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சிடம் கோரியுள்ளது.

இழப்பீடுகளை வழங்குவது தொடர்பில் பாகிஸ்தான் அதிகாரிகள் மற்றும் இறந்தவரின் தொழில் தருனருடன் வெளிநாட்டு அமைச்சின் ஒருங்கிணைப்புடன் இஸ்லாமாபாத்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நிலக்கரி இறக்குமதியும் ஊழல் புகார்களும்: சீமெந்துத் தொழிற்சாலை முதல் அனல்மின் நிலையம் வரை புத்தளத்தின் தொடர் போராட்டங்கள்.

மின்சாரம் - எரிசக்தி அமைச்சரினதும் அமைச்சின் செயலாளரினதும் இராஜினாமாவைத் தொடர்ந்து  நமது...

ஏப்ரல் 20 முதல் நாட்டின் பல பகுதிகளிலும் மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நாளை மறுதினம் முதல் (20) மாலை வேளையில்...

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராகி வரும் பாகிஸ்தான்!

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை முடக்கியுள்ள மேற்கு ஆசியப் போரை முடிவுக்குக் கொண்டுவர...

நாளை நள்ளிரவு முதல் எரிபொருளுக்கான QR நடைமுறை

நாளை நள்ளிரவு முதல் எரிபொருளுக்கான QR முறைமை மீள நடைமுறைக்கு வருமென...