ஒமிக்ரோன் பாதிப்பு அதிக தீவிரமானதாக இல்லையென அமெரிக்காவின் அறிவியல் நிபுணர் டாக்டர் ஃபாசி தெரிவித்துள்ளார்.டெல்டா வைரஸ் தான் இன்று வரை கொவிட் உருமாற்றமாக இருப்பதாகவும் அதிக மரணங்களை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட்டுடன் ஒப்பிடும்போது ஒமிக்ரோன் தீவிரம் குறைந்த நிலையில் தான் இருப்பதாகவும் தெரிவித்த டாக்டர் ஃபாசி இந்த புதிய உருமாறிய வைரஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பரவும் தன்மையுடையது, மற்ற உருமாறிய வைரசை விட வேகமாக பரவக்கூடியது என்றும் அவர் கூறியுள்ளார்.அதிகமாக பிரிட்டன் பாதிப்புக்கு உள்ளான நிலையில் இந்தியாவில் ஒமிக்ரோன் பாதித்தோரின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.