ஆப்கானிஸ்தானில் அகதிகள் அதிகரித்து வருவதால் உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடியின் விளிம்பில் இருப்பதாக ஐ.நா சபை எச்சரித்துள்ளது.
தொடர் போரினால் அந் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு நிலையினால் எதிர்வரும் காலங்களில் 38 மில்லியன் மக்கள் தொகையில் அதிகமானோர் பட்டினியால் வாடுவார்கள் என ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஐநா உயர் ஆணையாளர் ஃபிலிப்கோ கிராண்டி தெரிவித்துள்ளார்.எனவே ஆப்கான் அவசர பொருளாதார உதவியை நாடியுள்ளதாக கிராண்டி மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.