இந்தியாவில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18 இலிருந்து 21 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி பெண்களின் நலன் கருதி அவர்களது குறைந்தபட்ச திருமண வயதை அதிககரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நிதி ஆயோக் என்ற சிறப்பு குழு அமைக்கப்பட்டு பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதில் திருத்தம் செய்வது தொடர்பில் ஆராயப்பட்டது.இந் நிலையில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக அதிகரிக்க அக் குழு பரிந்துரைகளை முன்வைத்து மத்திய அரசிடம் அண்மையில் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது.
அக் குழு சமர்ப்பித்த பரிந்துரையின் அடிப்படையில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 21 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை இன்று (16) அனுமதி அளித்துள்ளது .இது தொடர்பான சட்ட மூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்தியாவில் ஆண்களின் குறைந்தபட்ச திருமண வயது 21 ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது.