அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பிராந்திய ஊடகவியலாளராக கடமையாற்றி வரும் சஹீர் அஹமட் பாரூக் என்ற ஊடகவியலாளருக்கு விடுக்கப்பட்ட தொடர்ச்சியான கொலை அச்சுறுத்தல் காரணமாக அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த ஊடகவியலாளரை தொடர்ச்சியாக இலக்கு வைத்து அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தை சேர்ந்த உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் அச்சுறுத்தல் விடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் குறித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த ஊடகவியலாளர் கடந்த 02.09.2021 கடமைக்குச் சென்ற போது குறித்த அதிகாரி போலீஸ் குழு ஒன்றுடன் இணைந்து அவரையும் தாக்கி அவரது புகைப்பட கருவிகளையும் சேதப்படுத்தியுள்ளமையும் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(பாறுக் ஷிஹான்)