சுனாமி ஏற்பட்டு இன்றுடன் 17 வருடங்கள் பூர்த்தி!

Date:

சுனாமி பேரலை அனர்த்தம்  இடம்பெற்று இன்றுடன் 17 வருடங்கள் பூர்த்தியாகின்றன.இதனை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் நினைவு தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பிரதான நிகழ்வு  காலி சுனாமி நினைவிடத்திற்கு அருகில் இடம்பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இன்று காலை 9.25 லிருந்து 9.27 வரை 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கிறது.2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி காலை  சுனாமி நாட்டை தாக்கியது. இதில் சுமார் 40 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

சுனாமி ஏற்பட்டதன் பின்னர் 2005 ஆம் ஆண்டில் இலங்கையில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஸ்தாபிக்கப்பட்டது.இதன்படி அனர்த்தங்களை முன்கூட்டியே அறிவித்தல், அனர்த்தங்களின் போது பாதிப்புக்களை குறைப்பதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுத்தல் என்பன நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அனர்த்தங்கள் பற்றி அடிக்கடி தெளிவுபடுத்தும் வேலைத் திட்டங்களும் முன்னெடுக்கப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...