பிரபல பின்னணிப் பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார்!

Date:

தமிழ் சினிமாவின் பின்னணி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் உடல் நலக்குறைவால் காலமாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2001ஆம் ஆண்டு வெளியான ‘தில்’ திரைப்படத்தில் ‘கண்ணுக்குள்ள ஒருத்தி’ என்ற பாடல் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர் பல்வேறு மொழிகளில் 800க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை பாடியுள்ளார்.

திரைப்பாடல்களை தவிர பக்தி பாடல்கள், நாட்டுப்புறப்பாடல்கள் என 15,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள இவர், திருடா திருடி, கம்பீரம், பேரழகன் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...