சகல அரச நிறுவகங்களிலும் நாளை முதல் வழமையான சேவை!

Date:

சகல அரச ஊழியர்களையும் நாளையில் இருந்து வழமை போன்று சேவைக்கு அழைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இது தொர்பான சுற்றுநிருபம் அரசசேவை, மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு வெளியிட்டுள்ளது.

கொவிட் பெருந்தொற்றுக் காரணமாக நிறுவகப் பிரதானிகளின் அங்கீகாரத்திற்கு அமைவாக இதுவரை அரச சேவையாளர்கள் பணிக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

நாளை முதல் வழமையான முறையில் பணி இடம்பெறுவதனால் சகல திணைக்களங்களிலும் சுகாதார வழிமுறைகளை முறையாக கடைப்பிடிப்பது அவசியமாகும்.

நாட்டின் வழமையான நடவடிக்கைகள் இடம்பெறுவதால் அரசசேவையும் புத்தாண்டில் இருந்து வழமைப்போன்று இடம்பெற வேண்டும். கொவிட் தொற்றின் காரணமாக அரசசேவை ஊழியர்களுக்கு 2 வருட காலம் சம்பளம் செலுத்தப்பட்டுள்ளது.தேவையின் அடிப்படையில் ஊழியர்களை பணிக்கு அழைப்பதற்காக நிறுவக பிரதானிக்கு அதிகாரம் வழங்கும் நடைமுறை புத்தாண்டு தொடக்கம் இரத்து செய்யப்படுவதாக அரசசேவை, மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பு இன்று ஆரம்பம்!

நாட்டின் 5ஆவது தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பை (National Oral Health...

பேருந்து கட்டணங்களில் மாற்றமில்லை: தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!

டீசல் விலை உயர்த்தப்பட்ட போதிலும் பேருந்து கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது...

சர்வதேச மோதல்களின் தாக்கம்: சடுதியாக அதிகரித்த எரிபொருள் விலை!

மத்திய கிழக்கு மோதல் காரணமாக உலகளாவிய எரிபொருள் விலைகள் உயர்ந்து வருவதை...

சில மாவட்டங்களுக்கு மழையுடனான வானிலை!

வட மாகாணத்திலும் திருகோணமலை மற்றும் அனுராதபுர மாவட்டங்களிலும் அவ்வப்போது சிறிதளவு மழை...