அதிபர் – ஆசிரியர் சேவைகளின் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்காக 2018 ஆம் ஆண்டு கல்வி அமைச்சால் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி அப்போதிருந்த சம்பள நிர்ணய சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை அடிப்படையாகக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதுடன், குறித்த யோசனையை நடைமுறைப்படுத்துவதற்காக 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டில் குறித்த சம்பள முன்மொழிவுகளைத் தயாரிக்கும் போது ஆசிரிய ஆலோசகர் சேவை நிறுவப்படாமையால், குறித்த சேவைக்கான சம்பளத்திட்டத்தை உள்ளடக்கி அதிபர் – ஆசிரியர் சேவைகளின் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்கு இயலுமான 03/2016 வகையில் பொது நிர்வாக சுற்றறிக்கை திருத்தம் செய்வதற்கு கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.