புயல், மோசமான வானிலை மற்றும் தொழில்நுட்பகோளாறால் நடுக்கடலில் மூழ்கிய படகில் சிக்கித் தவித்த 11 இந்திய மாலுமிகள் மீட்கப்பட்டுள்ளதாக ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது.
ஓமானின் சோகர் துறைமுகத்திற்கு சர்க்கரை ஏற்றிச் சென்ற படகு, சூறாவளிக் காற்று மற்றும் கடல் சீற்றத்தில் சிக்கி ஈரான் கடற்பகுதியில் நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து வந்த ஈரான் கடற்படையினர் படகில் தவித்த 11 இந்திய மாலுமிகளை மீட்டதாக தெரிவித்துள்ளனர்.