நாட்டில் பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.களனிதிஸ்ஸ அனல் மின் நிலையத்திலுள்ள மின்பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பல பகுதிகளுக்கு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
இந்த மின் தடை காரணமாக மஹரகம மற்றும் கோட்டை ஆகிய பகுதிகளில் தற்போது மின்தடை ஏற்பட்டுள்ளது.தடைப்பட்ட மின்சாரம் இன்றிரவு 9 மணிக்கு முன்னதாக வழமைக்கு திரும்பும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.