சுகாதார சேவைகள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு 1907 என்ற துரித தொலைபேசி இலக்கத்தினூடாக முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும்.மேலும் ´சுவ செவன´ என்ற பெயரில் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், 1907 என்ற துரித இலக்கத்தின் ஊடாக இவ்வாறான முறைப்பாடுகள் மற்றும் ஆலோசனைகளை முன்வைக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, 0707 907 907 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு வட்ஸ்அப் மற்றும் வைபர் ஊடாகவும் இந்த முறைப்பாடுகள் மற்றும் ஆலோசனைகளை முன்வைக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)