கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை(08) 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸை, கோட்டை, கடுவெல மாநகர சபைப் பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ மாநகர சபைப் பகுதிகள், கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபைப் பகுதிகள் மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.