மேல் மாகாணத்திலுள்ள அரச மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில்!

Date:

மேல் மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று (26) காலை 7 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை அரச மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவும் சம்பள முரண்பாடுகளை தீர்க்க எந்த தரப்பினரும் தலையிடாமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அதன் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

சம்பள வேறுபாடுகள் மற்றும் பிரச்சினைகளுக்கு நிர்வாக ரீதியிலான தீர்வுகள் வழங்கப்படாமை குறித்து கவனம் செலுத்தி மாகாண மட்டத்தில் எட்டு வேலைநிறுத்தங்களை நடத்தியுள்ளோம்.

இந்த அடையாள நடவடிக்கைகளில் சுகாதார அமைச்சும் அரசாங்கமும் தலையிட்டு நியாயமான தீர்வுகளை வழங்கும் என்பது எமது நம்பிக்கை என அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நுண்நிதி கடன்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க புதிய சட்டமூலம்!

நுண்நிதி கடன்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக புதிய சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்தில்...

வெனிசுலா விவகாரம் குறித்து இலங்கை அதிகாரப்பூர்வ அறிக்கை!

வெனிசுலாவில் அண்மைய நிலைமைகள் குறித்து இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதுடன்,...

உயர்தரப் பரீட்சை மேலதிக வகுப்புகள் இன்று நள்ளிரவு முதல் தடை

2025 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான மேலதிக வகுப்புகளை நடத்துவது...

எரிபொருள்களின் விலைகள் அதிகரிப்பு.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (06)...