பயங்கரவாதத் தடைச் சட்டம் (தற்காலிக ஏற்பாடுகள்) வெளியுறவு அமைச்சரால் திருத்தங்களுக்காக நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேவையான குழுக்களை நியமித்துள்ளார் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தேவையான ஏற்பாடுகளை திருத்துமாறு குழுக்களின் அறிக்கைகளின்படி நீதி அமைச்சர் மற்றும் சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த நவம்பரில், 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழுவின் அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
சந்தேக நபர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பினை வழங்கும் விதியை அறிமுகப்படுத்துவது உட்பட பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் பல மாற்றங்களை முன்மொழிகின்றமை குறிப்பிடத்தக்கது.