பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்தும் சட்ட மூலத்திற்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான சட்டமூலம் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது
இந்நிலையில், பயங்கரவாத தடை சட்டத்தை திருத்தும் சட்ட மூலம் இலங்கையின் அரசியலமைப்பின் 3, 4, 11, 12(1), 13(1), 13(3), 13(4), 13(5), 138 அல்லது 141 ஆகிய சில சரத்துக்கள் சட்டங்களுக்கு முரணானது என்றும் அம்பிகா சற்குணநாதன் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அல்லது பொதுசன வாக்கெடுப்பு இன்றி இதை சட்டமாக இயற்ற முடியாது என சுட்டிக்காட்டி அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இதேவேளை குறித்த சட்டமூலத்திற்கு எதிராக மாற்றுக்கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து என்பவரும் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.