நாட்டின் தடுப்பூசி தேவைகளின் அடிப்படையில் வெளிநாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசியின் நான்காவது டோஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
உயர்கல்விக்காக அவுஸ்திரேலியா செல்லும் மாணவர்களுக்கு விசேட தடுப்பூசி போடும் வேலைத்திட்டம் முன்னர் முன்னெடுக்கப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குன்வர்தன தெரிவித்தார்.
தற்போது மற்ற நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்படும் சிறப்பு தடுப்பூசி திட்டங்கள் மற்றும் கொவிட் தடுப்பூசிகள் குறித்து வெளியுறவு அமைச்சகம் சுகாதார அமைச்சகத்திற்கு தெரிவித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.