இலங்கையுடனான உறவுகளுக்கு பாகிஸ்தான் முக்கியத்துவம் அளிக்கும்: பாக். பிரதமர் இம்ரான் கான்

Date:

நம்பகமான உறவு என்ற வகையில் இலங்கையுடனான தனது உறவுகளுக்கு பாகிஸ்தான் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அண்மையில் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெதென்னவை சந்துத்து பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி 2021 இல் தனது இலங்கை விஜயத்தை நினைவுகூர்ந்த பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான சகோதரத்துவ உறவுகளை வலுப்படுத்தவும் அனைத்து துறைகளிலும் இருதரப்பு உறவுகளை விரிவாக மேம்படுத்தவும் பாகிஸ்தானின் விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தினார்.

இலங்கைத் தலைமையின் பாகிஸ்தான் விஜயத்தை எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் இம்ரான் கான் மேலும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான்-இலங்கை உறவுகளில் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒரு முக்கிய அங்கமாக இருந்ததாகவும், பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான காரணியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெதென்ன இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான கூட்டுறவு உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டியதுடன் சர்வதேச மற்றும் பிராந்திய அரங்குகளில் பாகிஸ்தானின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.

பகிரப்பட்ட இலக்குகளை மேம்படுத்துவதற்காக இணைந்து பணியாற்றுவதற்கான உறுதிப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...