உக்ரைனிலிருந்து புறப்படும் சர்வதேச பயணிகள் விமானங்கள் எதிர்வரும் மார்ச் 23 வரை நிறுத்தப்படுவதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த நாட்டு அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், தற்போது ரத்து செய்யப்பட்ட விமானங்களில் பயணம் செய்பவர்கள் பயன்படுத்தப்படாத டிக்கெட்டுக்கு விமான திகதியை இலவசமாக மாற்றிக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.ரத்து செய்யப்பட்ட விமானங்களின் பயணிகளுக்கு முன் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் அந்த நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்படும் என உக்ரைன் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.