ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வான் எல்லையில் ரஷ்யா விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை எதிர்த்து உக்ரைனுக்காக முன்பு இல்லாதவாறு ஆயுத கொள்முதல் செய்ய முடிவெடுத்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மீது பல்வேறு புதிய பொருளாதார தடைகளை விதித்து, ரஷ்யா அரச செய்தி நிறுவனம், தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களை தடை செய்துள்ளார்.மேலும் ரஷ்யாவுக்கு உறுதுணையாக இருந்த பெலராஸ் மீதும் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.