உக்ரைனுக்குள் நுழைந்த பெலாரஸ் படைகள்: ரஷ்ய படைக்கு ஆதரவாக தாக்குதல்

Date:

பெலாரஸ் படைகள் உக்ரைக்குள் நுழைந்துள்ளது. உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்த உத்தரவு, படைகள் குவிப்பு, எல்லைகளை முற்றுகையிடுதல் போன்ற செயல்களில் ரஷ்யா இறங்கியுள்ளது.

தொடர்ந்து உக்ரைனின் இராணுவ தளங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் மீது ரஷ்யா தாக்குதலை தொடுத்து வருகிறது.

அந்தவகையில் உக்ரைனின் வடக்குப்பகுதியில் இருந்து பெலாரஸ் படைகள் தாக்குதல் நடத்துகின்றன.

ஏற்கனவே ரஷ்யாவுக்கு பெலாரஸ் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் இந்த தாக்குதல் இடம்பெறுகின்றன.

இதேவேளை உக்ரைன் போர் தொடரும் என்றும் அதிலிருந்து பின்வாங்க மாட்டோம் என்றும் ரஷய் பாதுகாப்பு அமைச்சர் அறிவித்துள்ளார்.

மேற்குலக நாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து ரஷ்யாவை பாதுகாக்கவே நடவடிக்கை எடுத்துள்ளோம் எனவும் தமது இலக்குகளை அடையும் வரையில் போரை முன்னெடுப்போம் என்று அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் போர்நிறுத்தம் தொடர்பில் தொடர்ந்தும் ரஷ்யாவுடன் பேசுவதற்கு தயாராகவே தயாராகவே இருக்கிறோம் எனவும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

எனினும் உக்ரைன் மீதான தாக்குதல்களை தொடர்ந்துள்ள ரஷ்யா அங்கு கனரக ஆயுத தளபாடங்களை குவித்து வருகின்றது.

இதேவேளை ரஷ்ய படைக்கு ஆதரவாக பெலாரஸ் இராணுவம் உக்ரைனுக்குள் நுழைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...