‘பாணின் விலையை நூறு ரூபா வரையில் அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்படலாம்’

Date:

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேக்கரிகள் முடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலைமையால் ஒரு இறாத்தல் பாணின் விலையை நூறு ரூபா வரையில் அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்படலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேநேரம், எதிர்வரும் காலங்களில் மேலும் பல பேக்கரிகளை மூடும் நிலை உருவாகும் எனவும் அந்த சங்கத்தின் தலைவர் கே.ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாடு தற்போது சந்தித்துவரும் பாரிய பொருளாதாரப் பிரச்சினையால் பல தொழில்துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், பேக்கரி உற்பத்தித் தொழிலும் மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது.

பேக்கரி உற்பத்திப் பொருட்களுக்குத் தேவையான கோதுமை மா, முட்டை, பாம் எண்ணெய் உள்ளிட்ட மூலப்பொருட்களுக்கான விலை அதிகரித்துள்ளது.

எனவே, இந்த அசாதாரண சூழல் தொடருமாயின், நாடு முழுவதும் உள்ள பேக்கரிகள் மூடப்படும் சூழ்நிலையும் விலையை அதிகரிக்கவும் நிலை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடுமுழுவதும் இரண்டில் ஒருபகுதியளவான எமது நடமாடும் சிற்றுண்டி வண்டிகளின் எண்ணிக்கையும் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி...

நிதியமைச்சு செயலாளரின் இல்லத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியத்த மக்கள்

அக்குரேகொடவில் உள்ள நிதியமைச்சின் செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை  ஆர்ப்பாட்டம்...

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாடு: இலங்கை மலாயர் சமூகம் குறித்து டி.கே. அசூர் உரை!

மலேசியாவின் தெரெங்கானு மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "5-வது சர்வதேச உம்மா...