பெட்ரோலிய களஞ்சியப் பிரிவின் தலைவராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நியமனம்!

Date:

இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன களஞ்சியசாலை பிரிவின் புதிய தலைவராக ஓய்வு பெற்ற ஜெனரல் எம்.ஆர். டபிள்யூ.டி. சொய்சா நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் தலைவர் நாலக பெரேரா தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் எம்.ஆர்.டபிள்யூ. டி சொய்சா, காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னைய தலைவராக இருந்தார்.

இதேவேளை, நீடித்து வரும் எரிபொருள் நெருக்கடி நாளையுடன் முடிவுக்கு வரும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே நம்புகின்றார்.

தற்போது இரண்டு கப்பல்களில் இருந்து மொத்தம் 65,000 மெட்ரிக் தொன் எரிபொருள் இறக்கப்பட்டுள்ளது, மற்றுமொரு எண்ணெய் தாங்கி இலங்கைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி...

நிதியமைச்சு செயலாளரின் இல்லத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியத்த மக்கள்

அக்குரேகொடவில் உள்ள நிதியமைச்சின் செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை  ஆர்ப்பாட்டம்...

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாடு: இலங்கை மலாயர் சமூகம் குறித்து டி.கே. அசூர் உரை!

மலேசியாவின் தெரெங்கானு மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "5-வது சர்வதேச உம்மா...