‘உக்ரைன் அரசை கவிழ்க்கும் எந்தத் திட்டமும் ரஷ்யாவிற்கு இல்லை’ : ரஷ்யா

Date:

உக்ரைன் நாட்டின் அரசை கவிழ்க்கும் நோக்கம் தங்களுக்கு இல்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.

உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள், தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன.

இதனால் உக்ரைன் மீதான இந்த தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

உக்ரைன் மீது ரஷ்யா இன்று 15ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் நாட்டின் அரசை கவிழ்க்கும் நோக்கம் தங்களுக்கு இல்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.

இது குறித்து ரஷியாவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளரான மரியா ஸகாரோவா,
‘உக்ரைன் விவகாரத்துக்குத் தீர்வு காண்பதற்காக நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆனால், உக்ரைன் மீதான ரஷ்யாவின் சிறப்பு இராணுவ நடவடிக்கையின்போது, கீவ் பகுதியில் அமெரிக்க நிதி ஆதாரத்துடன் செயல்படுத்தப்பட்ட இராணுவ உயிரி ஆயுதத் திட்டத்திற்கான தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

அதேநேரம் பொதுமக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்வதற்கு பாதுகாப்பு வழித்தடம் அமைப்பது குறித்து உக்ரைன் பிரதிநிதிகளுடன் மேலும் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடைபெறும்.

உக்ரைனின் தற்போதைய அரசைக் கவிழ்க்கும் நோக்கில் அங்கு இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இந்தப் போர் உக்ரைனின் இறையாண்மைக்கோ, அந்த நாட்டு மக்களுக்கோ எதிரானது அல்ல என்பதை மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறோம் என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இந்த ஆண்டில் இதுவரை 1.3 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை!

இந்த ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை...

இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரி சதக்கத்துல்லா மறைவு!

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) மேனாள் அதிகாரியும், பொருளாதார வல்லுநருமான முனைவர்...

இலங்கையில் 83,000 ஐக் கடந்தது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை மேலும்...

ஆன்மீக ஒளி பரப்பும் எசல பௌர்ணமி தினம் இன்று!

இலங்கை உள்ளிட்ட உலகெங்கும் உள்ள பௌத்த மக்களால் மிகுந்த பக்தியுடன் அனுஷ்டிக்கப்படும்...