ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 25ஆவது வருடாந்த மாநாடு!

Date:

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 25ஆவது வருடாந்த மாநாடு இன்றையதினம் சனிக்கிழமை மருதானை அல்ஹிதாயா மகா வித்தியாலய, எம்.சி.பஹர்தீன் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வு முஸ்லிம் மீடியா போரத்திர் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் நடைபெற்றது.

பிரதம அதிதிhயக ஊடக அமைச்சர் டலகஸ் அழகப்பெரும மற்றும் இந்திய பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி ஆகியோர் கலந்துகொண்டார்.

இந் நிகழ்வில் 2022ம் ஆண்டுக்கான முஸ்லிம் மீடியா டிரக்ரி, இலங்கை பத்திரிகைச் சங்கங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜர், வருடாந்த இதழ் என்பன வெளியீட்டு வைக்கப்பட்டன.

மேலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவராக புர்ஹான் பீ இப்திக்கார் செயலாளராக பிஸ்ரின் முஹமட் மற்றும் பொருளாளராக சிஹார் அனீஸ் ஆகியோருடன் 18 பேர் கொண்ட நிர்வாகக் குழுவும் தெரிவு செய்யப்பட்டது.

இதேவேளை யாப்புத்திருத்தம் செய்யப்பட்டதுடன் முன்னாள் தலைவர் என்.எம். அமீன் இவ் இயக்கத்தில் தொடர்ந்து இருத்தல் வேண்டும் அத்துடன் அவருக்கான ஒரு பதவியை நிர்வாகக் குழு தெரிவு செய்யும் எனவும் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...