‘அரசாங்கத்தால் தீர்வுகள் இன்றேல் பேருந்து கட்டணம் 30 சதவீதமாக உயரும்’: தனியார் பேருந்து சங்கம்

Date:

பேருந்துக் கட்டணத்தை 30 சதவீதத்தால் உயர்த்த மாகாணங்களுக்கிடையிலான தனியார் பேருந்து சங்கம் இன்று தீர்மானித்துள்ளது.

அதே நேரத்தில் குறைந்தபட்ச பேருந்துக் கட்டணத்தை தற்போதைய ரூ.17இல் இருந்து 30 ரூபாய் வரை உயர்த்த, அரசாங்கம் ஒரு தீர்வைக் கொண்டு வரவில்லை என்றால் பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டியிருக்கும் என குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில் தனியார் பேருந்து சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் கூறுகையில், சங்கத்தின் குழு உறுப்பினர்களுடன் இன்று நடந்த கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

கூட்டத்தில், டீசல் மானியம் வழங்க அரசிடம் கோரிக்கை வைக்க ஒப்புக்கொண்டனர். இவ்வாறு அவர் கூறினார். டீசல் மானியம் வழங்க அரசு பரிசீலிக்காவிட்டால், பஸ் கட்டணத்தை உயர்த்தி சேவையை தொடர வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

டீசலின் விலையை 55 ரூபாவினால் உயர்த்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள முடிவினால் மாகாணங்களுக்கிடையிலான பஸ் சேவையாளர்கள் பெரும் சவால்களை எதிர்நோக்கியுள்ளனர்.

விலை உயர்வுக்கு பின், உதிரி பாகங்கள், டயர், டியூப், எண்ணெய், கிரீஸ் என மற்ற விலைகளிலும் பாதிப்பு ஏற்படுவதுடன் இலாபம் இன்றி தவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, பிரச்சினைகளை விவாதிக்க தனியார் பேருந்து சங்கம் இன்று ஒரு கூட்டத்தை கூட்ட முடிவு செய்துள்ளது.

எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்தால் இன்னும் எந்த தீர்வையும் வழங்க முடியவில்லை.

அவர்கள் கூட விவாதத்திற்கு அழைக்கப்படவில்லை. அரசாங்கம் உடனடி தீர்வை முன்வைக்கத் தவறினால், திங்கட்கிழமை முதல் நாட்டில் உள்ள அனைத்து மாகாணங்களுக்கு இடையிலான பேருந்துகளையும் நிறுத்த தொழிற்சங்கம் சொந்தமாக முடிவு செய்யும்’ என்று அஞ்சன
பிரியஞ்சித் மேலும் கூறினார்.

இதேவேளை எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், பஸ் கட்டணங்களை அதிகரிக்கும் எண்ணம் இல்லை என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பஸ் உரிமையாளர்களுக்கு, டீசல் மானியத்தை வழங்க முடியுமா என்பது குறித்து, நிதி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்.

இதன்போது, எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு அமைய அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

ஜனாதிபதி – IMF பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு இடையிலான...

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வாகனங்களை மீள ஒப்படைக்க முடியும்: அமைச்சர் ஆனந்த விஜேபால

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வாகனங்களை, அவர்கள் கோரினால் மீண்டும் ஒப்படைக்க முடியும்...

இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது!

இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதாகவும், இதில் 70...

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு 8000 முறைப்பாடுகள்

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் இலக்கத்திற்கு...