சிறப்பு அதிரடிப் படையின் சில அதிகாரிகள் அண்மையில் பூஸ்ஸ சிறைச்சாலைக்குள் மதுபான போத்தல்களை போத்தல்களை கடத்த முற்பட்டதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், சிறைச்சாலை வளாகத்தினுள் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிக்கும் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளதாக கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் தலைவரும் சட்டத்தரணியுமான சேனக பெரேரா உறுதிப்படுத்தியுள்ளார்.
‘பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் பல மதுபான போத்தல்களுடன் சிறை வளாகத்திற்கு வருகைத்தந்ததுடன் எதற்காக சிறைக்குள் கொண்டு வந்தார்கள் என்ற நோக்கம் இன்னும் தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது கைதிகளுக்கோ அல்லது வேறு யாருக்கோ விற்கப்படுமா என்பது எங்களுக்கு இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.
ஆனால் வளாகத்திற்குள் மதுபானம் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை பொலிஸார் அவர்களை தடுக்க முற்பட்ட போது கைகலப்பு ஏற்பட்டதாகவும் அவர் என்று பெரேரா கூறினார்.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில், பூஸ்ஸ பொலிஸாரால் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும் இந்த விடயம் தொடர்பில் நியாயமான விசாரணை நடைபெறுமா என சந்தேகம் தெரிவித்த அவர், இந்த விவகாரத்தை அதிகாரிகள் புறக்கணிக்க முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
‘இந்த விவகாரம் நியாயமான முறையில் விசாரிக்கப்படாது என்று எனக்கு ஒரு உணர்வு உள்ளது, அதிகாரிகள் செல்வாக்கைப் பயன்படுத்தி விடயத்தை கண் துடைப்பு செய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், சி.சி.டிவி, வீடியோ காட்சிகளில், அதிரடிப்படை அதிகாரி ஒருவர், பாதுகாப்பு செயலாளரிடம் எங்களுக்கு விரும்பியபடி செய்ய அதிகாரம் உள்ளது என்று கூறுகிறார்.
இது கைதிகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது மற்றும் அவர்களின் பாதுகாப்பை பாதிக்கிறது,’ என்று அவர் கூறினார்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினரை எதிர்கொள்ள பயிற்சி பெற்றவர்கள், அவர்கள் இராணுவத்தின் ஒரு பகுதி.அவர்களின் மனநிலை வேறுபட்டது மற்றும் கடுமையானது.
கைதிகளுடன் அடைக்கப்படும் போது, கைதிகளின் மனநலம் பாதிக்கப்படும். அப்போதுதான் கைதிகள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக நேரிடும்,’ என்று முடித்தார்.