‘அரசாங்கத்தை கவிழ்க்கும் நேரம் இதுவல்ல, நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண்பதே முக்கியம்’ : ரணில்

Date:

இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணாவிட்டால் கிரீஸ் நாட்டைப் போன்ற நிலைமைக்கு வழிவகுக்கும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதேநேரம், அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிக்கும் நேரம் இதுவல்ல, மாறாக நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

2007-2008 நிதி நெருக்கடிக்குப் பிறகு கிரீஸ் நாடு கடன் நெருக்கடியை எதிர்கொண்டது. இது தொடர்ச்சியான திடீர் சீர்திருத்தங்கள் மற்றும் சிக்கன நடவடிக்கைகள் மூலம் மக்களை சென்றடைந்தது.

இந்த நிலைமையானது வறுமை மற்றும் வருமானம் மற்றும் சொத்து இழப்பு மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளுக்கும் வழிவகுத்தது.

மேலும், கிரீஸ் நாடாக இலங்கை மாறக்கூடும் என சுட்டிக்காட்டிய ரணில் விக்கிரமசிங்க, இலங்கையை காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

‘பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு ஒன்றுபட்ட முயற்சி தேவை என்றும் தற்போதைய சூழ்நிலையில் தேசிய அரசாங்கம் இயங்காது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...