சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி இலங்கை வருகை!

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதியொருவர் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாள் விஜயமாக இன்றைய தினத்தில் இலங்கை வரவுள்ள சர்வதேச நாணய நிதிய பிரதிநிதி ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவையும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவையும் சந்திக்கவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை நெருக்கடி மற்றும் அது தொடர்பில் முன்னெடுக்கப்படவேண்டிய பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக நிதி அமைச்சர் பசிஸ் ராஜபக்ஷ விரைவில் அமெரிக்க செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய எதிர்காலத்தில் கடன் உதவி வழங்குவதற்கான நிபந்தனைகள் அடங்கிய யோசனைத் திட்டமொன்றையும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி இதன்போது சமர்ப்பிக்கவுள்ளனர்.

இதன்போது அவர் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானி உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...