பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்யும் கையெழுத்து போராட்டத்தில் இணைந்தார் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா !

Date:

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான கையெழுத்து போராட்டத்தில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கையெழுத்திட்டுள்ளார்.

நேற்றையதினம், மாத்தறையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கான நாடு தழுவிய கையொப்ப பிரச்சாரத்தில் இணைந்து கொண்டார்.

இந்நிலையில், ஹிஸ்புல்லாவுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட மேலும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரி அனைவருக்கும் நீதி வழங்கும் போராட்டம் நேற்று காலி மற்றும் மாத்தறையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை சிறைச்சாலைகளுக்குப் பின்னால் வாழும் போது, இதுபோன்ற நிகழ்வுகளின் செய்திகள், எனது குடும்பத்திற்கும் எனக்கும் ஒரு நாள் இந்த சவால்களை முறியடிப்போம் என்ற நம்பிக்கையை அளித்தன என ஹிஜாஸ்புல்லா தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்பு கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் யையெழுத்துப் போராட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...