ஜே.வி.பி ஆர்ப்பாட்டக்காரர்கள் வலுக்கட்டாயமாக ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைந்தனர்!

Date:

மக்கள் விடுதலை முன்னணியில் (ஜே.வி.பி) இணைந்த சோசலிச இளைஞர் சங்கத்தின் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்குள் வலுக்கட்டாயமாக பிரவேசித்துள்ளனர்.

எவ்வாறாயினும், அவர்கள் ஜனாதிபதி செயலக வளாகத்துக்குள் நுழைய விடாமல், விசேட அதிரடிப்படையினர் தடுத்துள்ளனர்.

திருகோணமலை எண்ணெய் தாங்கி ஆலையை விற்பனை செய்வதற்கும் யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை விற்பனை செய்வதற்கும் எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெக்னிக்கல் சந்தியிலிருந்து ஜனாதிபதி செயலகம் வரை ஆர்ப்பாட்ட பேரணியை ஆரம்பித்தது.

ஜனாதிபதி வரும் வரை போராட்டக்காரர்கள் வளாகத்திலேயே இருக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் ஜே.வி.பி கட்சி மூன்று தினங்களுக்கு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.

இதேவேளை , எதிர்வரும் மார்ச் மாதம் 23 ஆம் திகதி புதன்கிழமையன்று நுகேகொடையில் பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளது.

இறுதிப் போராட்டம் விவசாயிகளால் எதிர்வரும் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பொலன்னறுவையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணங்களை செலுத்தும் முறை

வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணங்களை செலுத்தும் முறை எதிர்வரும் திங்கட்கிழமை...

அல்குர்ஆன் மனனப் போட்டி – 2025: மேல் மாகாணத்துக்கான போட்டி கொழும்பில்..!

முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் (DMRCA) சவூதி அரேபியா தூதரகமும் இணைந்து...

நுகேகொட பகுதியில் சிறப்பு போக்குவரத்து திட்டம் அமுல்.

நுகேகொட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இடம்பெற உள்ள பொதுக் கூட்டம்...

நுகேகொட பேரணி : ஒலி அமைப்புக்களின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்

மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இன்று...