(File Photo)
அண்மையில் இந்தியா இலங்கைக்கு வழங்கிய பொருளாதார அபிவிருத்தி உதவிகள் மற்றும் கடன் வசதிகளுக்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டு ஊடக அறிக்கையிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது, எதிர்காலத்திலும் இலங்கையின் அபிவிருத்தி தொடர்பில் இந்திய அரசாங்கம் விசேட கவனம் செலுத்தும் என எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் கூறினார்.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்திய அரசாங்கம் வழங்கிய ஆதரவுக்கும் நிதி உதவிக்கு நன்றி செலுத்தியதுடன் எதிர்காலத்தில் இந்திய அரசாங்கம் இலங்கையின் விவகாரங்கள் மற்றும் இலங்கையின் அபிவிருத்தி தொடர்பில் விடேச கவனம் செலுத்தும் என எதிர்பார்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.