‘மலையக தமிழர்கள் சார்பான அபிலாஷைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும்’ :இராதாகிருஷ்ணன்

Date:

இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு, இலங்கை அரசாங்கத்துடன் இந்தியாவின் நல்ல பயனுள்ள விடயங்களை இந்திய உயர்ஸ்தானிகரிடம் முன்வைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர் வே. இராதாகிருஷ்ணன், நியுஸ் நவ் செய்தி தளத்துக்கு தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம், தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக இராதாகிருஷ்ணனிடம் தொடர்பு கொண்ட போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, மலையக மக்களின் அபிலாஷைகள் தொடர்பில் விசேடமாக கவுன்சிலுக்கு கலை, கலாசார தொடர்பில் அபிவிருத்தி செய்வதான ஒரு முன்மொழிவை முன்வைத்துள்ளார்.

அதுமட்டுமில்லாது பெருந்தோட்டங்களில் வாழ்ந்து கொண்டுள்ள மக்கள் கல்வி, சுகாதாரம் மற்றும் பிரச்சனைகள் தீரக்கப்படவேண்டும் என்பது தொடர்பிலும் ஆலோசனை முன்வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 4 மதங்களில் இந்திய வம்சாவளி மக்களும் அடையாளப்படுத்தப்பட்ட சமூகமான ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனவும் இந்த குறிப்பிட்ட சில விடயங்களும் இந்திய உயர்ஸ்தானிகரிடம் முன்வைக்கப்பட்டதாக இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ‘இந்தியப் பிரதமருக்கான முன்மொழிவுகளுடன் கூடிய ஒரு அபிலாஷை ஆவணத்தை உயர்நீதிமன்றத்தில் முன்வைத்து, இலங்கையின் முழு குடிமக்களாக பிரதான திட்டத்தை நோக்கி, இலங்கையுடனான நட்பை பயன்படுத்தி, தேசிய தளத்தில் முழு இலங்கை பிரஜைகளாக எமக்கு உதவும்படி இந்தியாவை யுள்ளதாக மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

கணேசன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் அகந்தன் வேலுசாமி ராதாகிருஷ்ணன், உதய குமார், கே.டி. குருசாமி எம்.பி.சி., பேராசிரியர். சந்திரசேகரம் இந்தியா ஹவுஸிலும், இந்தியா சார்பில் எச்.சி. கோபால் பாக்லே, டி.எச்.சி. வினோத் ஜேக்கப் மற்றும் அரசியல் செயலர் பானு பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கான, மலையக தமிழர்கள் சார்பான அபிலாசைகள் அடங்கிய ஆவணம், தமிழ் முற்போக்கு கூட்டட்ணியினரால் இந்திய உயர்ஸ்ர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது, மலையக தமிழர்கள் தொடர்பான கூடிய அக்கறையை செலுத்த மோடி அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

இந்த பின்னணியில், ஏனையோருடன் சமத்துவமாக வாழ விரும்பும் மலையக மக்கள் தொடர்பான இந்த அதிகாரபூர்வ ஆவணம் மிகவும் பயன்தருகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...