2022 ஆம் ஆண்டுக்கான உலக ஸ்னூக்கர் போட்டியில், இலங்கையின் மொஹமட் இர்ஷாத்

Date:

தேசிய ஸ்னூக்கர் சம்பியனான மொஹமட் தாஹா இர்ஷாத் அமெரிக்காவில் நடைபெறவுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான உலக ஸ்னூக்கர் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பினை இலங்கையில் இருந்து பெற்றிருக்கார்.

இந்த ஆண்டின் ஜுலை மாதம் 7 ஆம் திகதி தொடக்கம், 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த ஸ்னூக்கர் விளையாட்டுப்போட்டிகளில் ஆடும் வாய்ப்பினை இர்ஷாத் தாஹா கட்டாரில் ஒழுங்கு செய்யப்பட்ட (Billiard) உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் தொடரில் வெளிப்படுத்திய சிறந்த ஆட்டத்தின் மூலம் பெற்றிருந்தார்.

கனிஷ்ட சிரேஷ்ட பிரிவுகளில் இலங்கையின் ஸ்னூக்கர் மற்றும் பில்லியார்ட் சம்பியனாக காணப்படுகின்ற இர்ஷாத் கட்டாரில் நடைபெற்றிருந்த 21 வயதின் கீழ்ப்பட்ட போட்டியாளர்களான உலக ஸ்னூக்கர் சம்பியன்ஷிப் தொடரிலும் அடுத்தடுத்த வெற்றிகளுடன் இலங்கையின் நாமத்தினை உலகறியச் செய்திருந்தார்.

இதேவேளை இலங்கை, தாய்லாந்து, ஈரான் இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா, சிரியா, ஜேர்மனி மற்றும் கட்டார் போன்ற முன்னணி நாடுகுளின் 18 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நுகேகொட பகுதியில் சிறப்பு போக்குவரத்து திட்டம் அமுல்.

நுகேகொட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இடம்பெற உள்ள பொதுக் கூட்டம்...

நுகேகொட பேரணி : ஒலி அமைப்புக்களின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்

மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இன்று...

வடக்கு, கிழக்கு, வடமத்தியில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (21) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை...

ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு

ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகுவதாக...