பலஸ்தீனின் ‘பூமி’ தினத்தை முன்னிட்டு கொழும்பில் கண்காட்சி!

Date:

பலஸ்தீனின் ‘பூமி’ தினத்தை முன்னிட்டு இடம்பெறுகின்ற கண்காட்சி நிகழ்விற்கான ஆரம்ப நிகழ்வு இன்று பலஸ்தீனின் தூதரகத்தில் இடம்பெற்றது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார, சுரேன் ராகவன் மற்றும் பலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் எம்.எச். செய்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதேவேளை 29,30,31 ஆகிய தினங்களில் பலஸ்தீன்- இலங்கைக்கு இடையிலே உள்ள நல்லுறவு தொடர்பான முக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.

1948ஆம் ஆண்டு ஒரு தேசம் இரண்டு பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. அதில் ஒரு பிரதேசம் பிரிக்கப்பட்ட தினம் முதலே தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டது.

மற்றொரு பிரதேசம் போராடி தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டது. இதில் அங்கீகரிக்கப்பட்ட நாடு இஸ்ரேல். மற்றொன்று பாலஸ்தீனம்.

மற்றொரு பிரதேசமான பாலஸ்தீனம் இன்று வரையில் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பகுதியாகத்தான் குறிப்பிடப்பட்டுவருகிறது. 2012-ம் ஆண்டுதான் பாலஸ்தீனம் ஐ.நா-வில் ‘ஒப்சர்வர் ஸ்டேட்’ என்கிற அந்தஸ்தைப் பெற்றது.

இங்கு 90 சதவிகிதத்துக்கும் அதிகமாக இஸ்லாமிய மக்களே வாழ்ந்துவருகின்றனர். மேற்குக் கரை,காஸா என பாலஸ்தீனம் இரண்டு பகுதிகளாகப் பிரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...