இன்றும் நாளையதினமும் (மார்ச் 31) டீசல் போதுமானளவு கையிருப்பில் இல்லாததனால் எரிபொருள் நிலையங்களில் வரிசையில் நிற்க வேண்டாம் என பொதுமக்களிடம் இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதன் தலைவர் சுமித் விஜேசிங்கவின் கூற்றுப்படி, நேற்று (மார்ச் 29) மாலை திட்டமிடப்பட்டிருந்த 37,500 மெற்றிக் தொன் டீசல் ஏற்றுமதிக்கான இறக்கும் பணி திட்டமிட்டபடி நடைபெறவில்லை.
எவ்வாறாயினும், அத்தியாவசிய சேவைகளுக்கான டீசல் விநியோகம் தடையின்றி தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பெட்ரோல் விநியோகம் வழமைப் போன்று எவ்வித தட்டுப்பாடும் இன்றி தொடரும் என அதன் தலைவர் மேலும் தெரிவித்தார்.
எனினும். எரிபொருள் நிலையங்களில் அதிகமான மக்கள் வரிசைகளில் நிற்பதை அவதானிக்க முடிந்துள்ளதுடன் எரிபொருள் விரைவாக முடிந்து விடுவதாகவும் வாகன சாரதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.