சற்றுமுன்னர், மிரிஹானவில் பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான பேருந்து ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட இல்லத்திற்கு அருகில் இன்று மாலை இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.
இதனால் அங்கு சேவையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலர் காயமடைந்துள்ளனர்.
பெரிய மௌனப் போராட்டமாகத் தொடங்கிய இந்த போராட்டம், பின்னர் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் மக்கள் முன்னேற முயன்றதால் வன்முறையாக மாறியது.
போராட்டக்காரர்கள் போலீசார் போட்ட தடுப்புகளை கீழே தள்ள பலமுறை முயன்றனர்.
இறுதியில் ஒரு வரிசை தடுப்புகள் கீழே தள்ளப்பட்டன மேலும் போலீசார் தண்ணீர் பீரங்கி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை கொண்டு ஆட்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் தண்ணீர் பீரங்கி மீது கற்களை வீசினர்.
இதனால் அப்பகுதியில் பல மணி நேரம் பதற்றமான சூழல் நீடித்தது.
நாட்டில் நிலவும் மின்வெட்டு, எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு போன்றவற்றுக்கு எதிராகவே இந்த போராட்ட முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.