பிள்ளையான், வியாழேந்திரன், முஷாரப் அமைச்சர்களாக பதவியேற்பு!

Date:

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான சிவநேசத்துரை சந்திரகாந்தன் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

இன்று ஜனாதிபதி மாளிகையில் இந்தப்பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.

அதற்கமைய அவர் கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக அவர் பதவியேற்றுள்ளார்.

அதேநேரம், எதிர்க்கட்சியில் இருந்து அரசாங்கத்தின் பக்கம் சென்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினரான முஷாரப் எம்.பியும் இராஜாங்க அமைச்சராக நியமனம்பெற்றுள்ளார்.

அவர் நெசவுத்தொழில் உள்நாட்டு ஆடை உற்பத்தி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
மேலும் வியாழேந்திரன், இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுளார்.

ஏற்கனவே நேற்றையதினம் 22 பேருக்கு இராஜாங்க அமைச்சுப்பதவிகள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா...

பேஸ்புக்கில் AI மூலம் இயங்கும் போலி பெண் கணக்குகள்!

பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட...

டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தை எட்டியது!

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை 63,835 டெங்கு நோய்த் தொற்றாளர்கள் அடையாளம்...

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே சமூக ஊடகப் பயன்பாட்டைக் குறைக்க அரசு திட்டம்: பிரதமர்

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகப் பாவனையைக் குறைப்பதற்கான முன்னோடித் திட்டம்...