‘மருந்து தட்டுப்பாடு காரணமாக நாட்டில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை’: பாராளுமன்றில் சன்ன ஜயசுமண

Date:

எதிர்க்கட்சிகள் கூறுவது போல் இதுவரை மருந்து தட்டுப்பாடு காரணமாக நாட்டில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

அதேநேரம் அடுத்த மூன்று மாதங்களில் சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும், சில மருந்துகளின் கையிருப்புகளைப் பெறுவதற்கு சுமார் 90 நாட்கள் ஆகும் என்றும், மருந்துப் பற்றாக்குறையின் தாக்கத்தைக் குறைக்க அமைச்சு அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வின் போது அவர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.

இதன்போது, நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக இந்தத் தாமதம், ஏற்பட்டுள்ளது.
‘உலக வங்கி மற்றும் ஆசிய வங்கி ஆகியவை அத்தியாவசிய மருந்துகளை வாங்குவதற்கு எங்களுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளன.

உலக சுகாதார அமைப்பு (WHO) அடுத்த இரண்டு வாரங்களில் எங்களுக்கு அவசரகால மருந்துகளை வழங்கும். நாங்கள் செஞ்சிலுவை சங்கத்தின் உதவியையும் நாடியுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உயிர் காக்கும் பதினான்கு மருந்துகளில் ஒன்றிற்கும், 646 அத்தியாவசிய மருந்துகளில் 37க்கும், அத்தியாவசியமற்ற 486 மருந்துகளில் 48இற்கும் தற்போது தட்டுப்பாடு நிலவுவதாக அமைச்சர் கூறினார்.

.

Popular

More like this
Related

டெங்கு பரவலால் கொழும்பு பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் Online-இல்!

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நிலவும் டெங்கு பரவல் காரணமாக, அனைத்து கல்வி நடவடிக்கைகளையும்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா...

பேஸ்புக்கில் AI மூலம் இயங்கும் போலி பெண் கணக்குகள்!

பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட...

டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தை எட்டியது!

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை 63,835 டெங்கு நோய்த் தொற்றாளர்கள் அடையாளம்...