தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் அதன் பிரதிபலன்களை அனுபவிப்பர்:ஈஸ்டர் தாக்குதல் குறித்து பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் அறிக்கை!

Date:

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான மறைக்கப்பட்ட தகவல்கள் வெளியாகலாம் என்ற அச்சம் காரணமாக, அது தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுமா என்பது சந்தேகமே என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் மூன்றாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயத்தில் இன்று நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலில் முன்னாள் ஜனாதிபதியின் தொடர்பு அரசாங்க உயர் அதிகாரிகள் மூலம் அம்பலமாகிவிடும் என்ற அச்சத்தில் தற்போதைய அரசாங்கம் அவரைப் பாதுகாக்கிறதா என்ற சந்தேகம் நாட்டு மக்களுக்கும் தமக்கும் இருப்பதாகவும் கர்தினால் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிலாந்த ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரையை நடைமுறைப்படுத்தாததன் பின்னணியில் சதி இருப்பதாக பாராளுமன்ற தெரிவுக்குழு தெரிவித்துள்ளது.

அம்பலப்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் எவ்வித விசாரணையும் மேற்கொள்ளாமை, அனைத்தையும் சிவப்புக் கம்பளத்தின் கீழ் மறைத்து உண்மையை மறைக்கும் சிறுபிள்ளைத்தனமான முயற்சி எனவும் கொழும்பு பேராயர் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த அரசாங்கத்தின் போது, முன்னாள் பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்புச் செயலாளருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பாரிய தாக்குதலுக்கு உள்ளானதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலாந்த ஜயவர்தனவை அரசாங்கத்தின் முக்கிய சாட்சியாளராகப் பயன்படுத்திய சட்டமா அதிபர் திணைக்களம், அவருக்கு உரிய முறையில் வழக்குத் தொடரத் தவறியதன் நோக்கம் என்ன என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

தாக்குதல் தொடர்பில் தனக்குத் தெரியும் என பகிரங்கமாக ஒப்புக்கொண்ட ஹேமசிறி பெர்னாண்டோவுடன் முன்னாள் பொலிஸ் மா அதிபரையும் விடுதலை செய்தமை, தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களையும் சட்டமா அதிபர் திணைக்களத்தையும் அரசாங்கத்தையும் அவமதிக்கும் செயலாகும் எனவும் பேராயர் தெரிவித்தார்.

அட்டர்னி ஜெனரல் திணைக்களம் சட்ட விதிகளை மீறுவது அவமானமாகும் என்று கூறிய கர்தினால், நாட்டில் உள்ள அனைத்து அதிகாரங்களுக்கும் பின்னால் சர்வதேசம் இருக்கிறதா என்பது சந்தேகம் என்றும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவேன் என ஜனாதிபதி தேர்தல் மேடையில் கூச்சலிட்ட தற்போதைய ஆட்சியாளர், தான் ஆட்சிக்கு வந்ததும் வழங்கிய வாக்குறுதிகளை நிராகரித்துள்ளதாகவும், அவர்கள் செய்த பாவங்களின் பலனை விரைவில் அனுபவிக்க வேண்டும் பேராயர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்களின் கூக்குரல்கள் முழக்கமிடுகின்றன, இந்த தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் அதன் பிரதிபன்களை அனுபவிக்க நேரிடும் என முழுமையான நம்புகிறேன் எனவும் பேராயர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...

சலாம் ரமழான் 2026: கொழும்பு கிரீன் பாத்தில் தொடங்கிய கலாசார விழா!

இலங்கையின்  முஸ்லிம் கலாசாரத் திருவிழாவான ‘சலாம் ரமழான் 2026’, மேல் மாகாண...

உத்தேச முஸ்லிம் விவாகரத்து சட்ட சீர்திருத்தம் தொடர்பில் இலங்கை காதிமார் சம்மேளனத்தின் முன்மொழிவுகள்

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் (MMDA) முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் தொடர்பாக...

மத்திய கிழக்கிற்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த...