மருந்துப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

Date:

இலங்கையில் மருந்துப் பொருட்களின் விலை தற்போது பாரியளவில் அதிகரித்துள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் வைத்தியர் ஜி.ஜி சமல் சஞ்சீவ இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அத்தியாவசிய மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

எனினும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமையின் காரணமாகவே தற்போது மருந்துப்பொருட்களின் விலை பல மடங்காக அதிகரித்துள்ளது.

எனினும், இன்னும் 12 வாரங்களில் கையிருப்பில் உள்ள மருந்துப்பொருட்கள் நிறைவடையும் என்பதால் பாரிய பாதிப்புக்களை எதிர்நோக்க வேண்டியேற்படும்.

சாதாரண மருந்துகளுக்கு கூட 1,500 முதல் 2,000 ரூபா வரையில், செலவிட வேண்டியேற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் தொழிற்சங்கத்தின் தலைவர் வைத்தியர் ஜி.ஜி சமல் சஞ்சீவ குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...