கொழும்பில் மண்ணெண்ணய்க்கான கேள்வி அதிகரிப்பு: நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

Date:

சமையல் எரிவாயு விலையேற்றத்தை அடுத்து மண்ணெண்ணய்க்கான கேள்வி மேலும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக கொழும்பு நகர் பகுதிகளுக்குள் வாழும் மக்களுக்கு வேறு தெரிவே கிடையாது என்பதால் காலை முதல் மாலை வரை மக்கள் மண்ணெண்ய்க்காக வரிசையில் நின்று கொண்டு காத்திருக்கிறார்கள்.

அவர்களின் வாழ்விட அமைவு சூழலில் விறகு பாவனை பற்றி எல்லாம் எண்ணிக் கூட பார்க்க முடியாது. இன்று முற்பகல் 11.30 அளவில் கொழும்பு கிறேண்ட்பாஸ் பகுதியில்மக்கள் நீண்ட வரிசையில் இருந்த காட்சியே இது.

மக்கள் இந்தப் பிரச்சினைக்கு என்ன தீர்வு. அது எப்போது அமுலுக்கு வரும் என்று ஒரு வார காலமாக பாராளுமன்றம் கூடியும் காத்திரமான எந்த முடிவும் இல்லை. கதிரைகளை கணக்குப் போடும் விளையாட்டு தான் நடந்தது. தொடர்ந்தும் நடக்கின்றது.

இந்தக் கதிரைகள் ஏல விற்பனையில் விற்பனையாகி சிலர் பதவிகளைப் பெற்றுக் கொண்ட கேவலத்தை தவிர, பொது மக்களுக்கு எந்த நன்மையும் கிட்டவில்லை.

 

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...