நாட்டு மக்கள் இப்போது அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை நீக்கி 21 ஆவது திருத்தத்தை ரத்து செய்ய விரும்பவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அத்தோடு எரிபொருள், எரிவாயு, மின்சாரம், மருந்து உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை மீளப் பெற்று இயல்பு வாழ்க்கையைத் தொடரவே விரும்புகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் எடுக்கும் தவறான முடிவுகளினால் பாதிக்கப்பட்ட மக்களின் உண்மையான பிரச்சினைகளை கண்டறிந்து துரிதமாக தீர்க்க வேண்டும் எனவும், இல்லையேல் நாடு பேரழிவிற்குள்ளாகும் எனவும் அபேவர்தன தெரிவித்தார்.
நாட்டுக்கு அவசர பொருளாதார தீர்வொன்று தேவைப்படுவதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஏற்கனவே அந்த தீர்வுகளை பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளதாகவும் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.