பிரித்தானியா அறிமுகம் செய்யும் புதிய விசா!

Date:

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் பயின்ற மாணவர்களை பிரித்தானியாவுக்கு அழைப்பதற்காக பிரித்தானியா புதிய விசா ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

High Potential Individual (HPI) visa என்று அழைக்கப்படும் இந்த விசாவுக்கான விண்ணப்பங்கள், இம்மாதம் (மே) 30 ஆம் திகதி முதல் வரவேற்கப்படுகின்றன.

இந்த விசா திட்டத்தின்படி, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பயின்ற பட்டதாரிகள், தங்கள் கல்வித் தகுதிக்கேற்றாற்போல், பிரித்தானியாவில் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு பணி செய்யவும், தங்கவும் அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த திட்டத்தால் பிரித்தானியாவுக்கு என்ன இலாபம் என்றால், பணி வழங்குவோர் ஸ்பான்சர்ஷிப்புக்கான கட்டணம் செலுத்தாமலே பட்டதாரிகளை பணிக்கமர்த்திக்கொள்ளலாம். பட்டதாரிகளோ பிரித்தானியாவுக்கு வந்தபின் எந்த துறையில் வேண்டுமானாலும் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த விசாவுக்கு யார் விண்ணப்பிக்கலாம்?

பிரித்தானியாவுக்கு வெளியே, அதாவது வெளிநாடுகளில், முறையான பல்கலைக்கழகம் ஒன்றில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்குள் பட்டப்படிப்பு முடித்த பட்டதாரிகள் இந்த விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்.

குறைந்தபட்சம் 18 வயதுடைய எந்த நாட்டவரானாலும் விண்ணப்பிக்கலாம்.

இந்த விசா திட்டத்தின் சிறப்பம்சங்கள்

இந்த விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கு உங்களுக்கு பிரித்தானியாவிலிருந்து வேலைக்கான அழைப்பு வந்திருக்கவேண்டும் என்ற அவசியமோ, ஸ்பான்சர்ஷிப்போ தேவையில்லை.

நீங்கள் பிரித்தானியாவில் சொந்தத்தொழில் செய்யவோ, தன்னார்வலராகவோ பணியாற்றவோ கூட செய்யலாம்.

இந்த விசா ஒரு முறைதான் வழங்கப்படும், ஏற்கனவே பட்டதாரி விசா பெற்றவர்களுக்கு இந்த விசா வழங்கப்படாது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

மொழித்திறன் தேவை

உங்கள் பட்டப்படிப்பு ஆங்கில மொழியில் பயிற்றுவிக்கப்படாதிருந்தால், அதாவது நீங்கள் ஆங்கில மீடியம் வாயிலாக கற்கவில்லையென்றால், நீங்கள் மொழித்தேர்வில் குறைந்தபட்சம் B1 மட்டத்தில் வெற்றிபெறவேண்டும்.

இந்த விசாவுக்காக ஆகும் செலவு 715 பவுண்கள் ஆகும்.

மேலும், நீங்கள் விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கு 31 நாட்களுக்கு முன்பிருந்தே, உங்கள் வங்கிக்கணக்கில் தொடர்ச்சியாக 28 நாட்களுக்கு 1,270 பவுண்டுகளுக்கு சமமான தொகை வைத்திருப்பதை காட்டவேண்டியிருக்கும்.

நீங்கள் 12 மாதங்களுக்கும் அதிகமாக பிரித்தானியாவில் வாழ்ந்துவந்தால் இந்த நிபந்தனை உங்களுக்குப் பொருந்தாது.

இளங்கலை அல்லது முதுகலைப் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கும், முனைவர் மற்றும் அதற்கு சமமான படிப்பை முடித்தவர்கள் மூன்று ஆண்டுகளுக்கும் பிரித்தானியாவில் தங்க இந்த விசா வழிவகை செய்கிறது.

நீங்கள் உங்களுடன் உங்கள் கணவர் அல்லது மனைவி மற்றும் 18 வயதுக்குக் கீழுள்ள பிள்ளைகளையும் அழைத்துவரலாம். நீங்கள் நேரடியாக நிரந்தர வாழிட உரிமத்துக்கு விண்ணப்பிக்க முடியாது.

அதற்கு பதில், உங்கள் விசா காலாவதியாகும் முன்னரே, திறன்மிகு பணியாளர், start-up and innovator, exceptional talent அல்லது scale-up route போன்ற அனுமதிகளுக்கு மாறிக்கொள்ளலாம்.

(source:lankasri.com)

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...