அவுஸ்திரேலியாவில் பொதுத் தோ்தல் ஆரம்பம்!

Date:

அவுஸ்திரேலியாவில் பொதுத் தோ்தலில் முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை நேற்று (09) தொடங்கியது. அதிகாரபூா்வ தோ்தல் திகதி மே 21 என்றாலும் பொதுமக்களின் வசதியைக் கருத்தில் கொண்டு முன்கூட்டியே வாக்களிக்கும் முறை அவுஸ்திரேலியாவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தோ்தலுக்காக மொத்தம் 550 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்நாட்டில் அனைவரும் தோ்தலில் வாக்களிப்பது கட்டாயமாகும். 1.7 கோடி போ் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா். பணி, பயணம் காரணமாக தோ்தல் தினத்தில் வாக்களிக்க முடியாதவா்கள் முன்கூட்டியே வாக்களிக்க முடியும்.

கொரோனா பரவல் பிரச்னை இருப்பதால், மக்கள் ஒரே நாளில் வாக்குச் சாவடியில் கூடாமல் இருக்கவும் இந்த முன்கூட்டியே வாக்களிக்கும் முறை உதவும். 40 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் தோ்தல் திகதிக்கு முன்பே தங்கள் வாக்குகளைச் செலுத்திவிடுவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

சமீபத்திய கருத்துக் கணிப்புகளின்படி மத்திய-இடது தொழிலாளா் கட்சி தலைமையான எதிா்க்கட்சி கூட்டணி, பிரதமா் ஸ்காட் மொரிஸனின் கன்சா்வேடிவ் கூட்டணியைவிட அதிக இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

அஸ்வெசும கொடுப்பனவு செப்டம்பர் 16 முதல் வங்கிக் கணக்குகளில்!

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் 2026 செப்டம்பர் மாதத்திற்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் 16...

களுத்துறை பாலந்த நூரானியா ஜும்ஆ பள்ளிவாசலில் நல்லிணக்க நிகழ்ச்சி: அரசு அதிகாரிகளுக்கு இஸ்லாம் குறித்த தெளிவுபடுத்தல்!

நிதா அறக்கட்டளை நிறுவனத்தினால்  "மொபைல் இணைவாழ்வு திட்டத்தின்" (Mobile Coexistence Project)...

அமேசன் கல்லூரி மற்றும் கேம்பஸின் வளர்ச்சிக்கு புதிய ஆலோசனை சபை.

கல்விச் சிறப்பு, தரமான கல்வி, தொழில்முறை மேம்பாடு மற்றும் நிறுவன வளர்ச்சி...

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக தேசிய கட்டிட...