மஹிந்த ராஜபக்ஷவின் குருநாகலிலுள்ள வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை, மெதமுலனவில் உள்ள ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக வீடு, எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வடமத்திய மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் மற்றும் அவரது மகன் அமைச்சர் கனக ஹேரத் ஆகியோரின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சிக்கு சொந்தமான சில்லறை விற்பனை நிலையமொன்று பண்டாரவளையில் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது
பிரசன்ன ரணதுங்கவின் வீட்டுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.
காமினி லொக்குகேவின் வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது